இரட்சிப்பின் கவிதை
Tamil Language (தமிழ்)
இயேசுவே, நீர் சிலுவையில் மரித்தீர்
உயிரோடு எழும்பினீர் என்னை மீட்கவே
என் பாவம் எல்லாம் இப்போ மன்னியும்
கர்த்தராய், மீட்பராய், நண்பராய், என்னில் வாரும்
என் வாழ்வை மாற்றி புதிதாக்கும்
கர்த்தரே, அருள் செய்யும் உமக்காய் வாழ
ஆக, உங்கள் வாழ்வை இயேசுவின் கட்டளைக்கு இணங்க வாழ முடிவு செய்துள்ளீர்கள்…
இனி என்ன?
கிறிஸ்துவம் என்றால் என்ன , அல்லது அது எவ்விதமான வாழ்வியல் முறையை வழங்கி உங்களை நிறைவாக்குகிறது என்று நீங்கள் எப்போதாவது எண்ணி வியந்தது உண்டா, அப்படி என்றால் புது நம்பிக்கையாளர் பாடவகுப்பும் அதற்கெனவே உள்ளது. தேவ நற்செய்தியை புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் அது உதவுகிறது.
கிறிஸ்து மீதான உங்கள் புரிதலும் அன்பும் தழைத்து ஓங்க எளிய வடிவில் நற்செய்தி காணொளி பாடவகுப்பில் பதியுங்கள்.